என்எல்சி இந்தியா சார்பில் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரிக்கு நவீன கலையரங்கம்

நெய்வேலி, பிப். 19: என்எல்சி இந்தியா நிறுவனம், தனது சமூக பொறுப்புணர்வு திட்டத்தின்கீழ், கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு, பல்வேறு அடிப்படை வசதிகளை தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. இதில் விருத்தாசலம்  கௌஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் ரூ. 1 கோடியே 12 லட்சம் செலவில் என்எல்சி இந்தியா நிறுவனத்தால் கட்டப்பட்ட, திருவள்ளுவர் கலையரங்கினை  என்எல்சி இந்தியா  மனிதவளத்துறை இயக்குநர் விக்ரமன் முன்னிலையில் கடலூர் ஆட்சியர்  அன்புசெல்வன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய என்எல்சி இந்தியா  மனிதவளத்துறை இயக்குநர்  விக்ரமன் என்எல்சி இந்தியா நிறுவனம் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கடந்த சில ஆண்டுகளாக. தனது சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் மூலமாக கல்வி, பொது சுகாதாரம் மற்றும் நீர்நிலைகள் மேம்பாடு ஆகிய மூன்று துறைகளுக்கும் முக்கியத்துவம் வழங்கி வருவதாகத் தெரிவித்தார்.

இதனையடுத்து கலையரங்கினை திறந்துவைத்து உரையாற்றிய ஆட்சியர்  அன்புசெல்வன் கடலூர் மாவட்டம் அடிக்கடி இயற்கை பேரிடர்களால், குறிப்பாக புயல் மற்றும் மழைவெள்ளத்தால் பாதிக்கப்படும் மாவட்டமாக இருந்துவரும் போதிலும், என்எல்சி இந்தியா நிறுவனம், இம்மாவட்டத்திலுள்ள நீர்நிலைகளை ஆழப்படுத்தி, அதன் கரைகளை வலுப்படுத்திவருவதால் இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இம்மாவட்டத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த என்எல்சி இந்தியா நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது என பாராட்டினார்.

இதில்  கலைசெல்வன் எம்எல்ஏ, என்எல்சி  சமூக பொறுப்புணர்வுத்துறை தலைமை பொதுமேலாளர் மோகன், சார் ஆட்சியர் பிரவீன் குமார், டிஎஸ்பி இளங்கோவன், கல்லூரி முதல்வர்  ராஜவேலு,  பேராசிரியர்கள், தமிழக அரசின் அதிகாரிகள்,  மாணவ மாணவிகள்  பங்கேற்றனர்.  இதனையடுத்து  விருத்தாச்சலம்-புதுக்கூரைப்பேட்டை இடையே ரூ. 1 கோடியே 98 லட்சம் செலவில் 2.25 கிலோ மீட்டர் தூரத்திற்கு, என்எல்சி  சமூக பொறுப்புணர்வு திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட சாலையையும், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில்  அமைக்கப்பட்டுள்ள நவீன குடிநீர் சுத்திகரிப்பு கருவியை  விக்ரமன் இயக்கி வைத்தார்.

Related Stories: