சுமை தூக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை குடிக்க பணம் தர மறுத்த தங்கை மீது பெட்ரோல் ஊற்றி உயிரோடு கொல்ல முயற்சி வாலிபரும், உறவினரும் தீயில் கருகி காயம்

சீர்காழி,பிப்.17: குடிக்க பணம் தர மறுத்த தங்கை மீது பெட்ரோல் ஊற்றி உயிரோடு கொல்ல முயன்ற வாலிபர் காயமடைந்தார். அவரை காப்பாற்ற முயன்ற உறவினரும் தீயக்காயமடைந்தார்.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மகன் மகேஷ் (39). திருமணம் ஆகாத இவர் எப்போதும் குடிபோதையிலையே இருந்து வருவார். இந்நிலையில் மகேஷ் சீர்காழி திருவள்ளுவர் நகரில் வசிக்கும் தனது தங்கை மஞ்சுளா (36) வீட்டில் நடைபெற்ற துக்க காரியத்துக்கு வந்துள்ளார். அப்போது குடிக்க பணம் கேட்டு மஞ்சுளாவிடம் தகராறு செய்துள்ளார். இதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகேஷ், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து மஞ்சுளா மீது ஊற்றி தீ வைக்க முயன்றுள்ளார். அருகில் இருந்த உறவினர் பெண்ணாடத்தை சேர்ந்த தமிழரசன் (48) என்பவர் தடுக்க முயன்ற போது அவர் மீதும் மகேஷ் பெட்ரோல் ஊற்றினார். பின்னர் மகேஷ் தீயை பற்ற வைத்ததால் இருவர் உடலிலும் தீ பிடித்து எரிந்தது.

இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே தீயை அனைத்து அவர்களை சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேலை நிறுத்த போராட்டம்

இது குறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக சுமை தூக்கும் தொழிலாளார்கள் சங்க மாநில துணைத்தலைவர் ராஜ்மோகன் கூறுகையில், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மிக குறைந்த கூலியே வழங்கப்படுகிறது. இந்த தொகையை வைத்து குடும்பம் நடத்த மிகவும் சிரமமாக இருக்கிறது. கொள்முதல் நிலையங்களுக்கு வரும் லாரிகளுக்கு கட்டாய மாமுல் கொடுக்க வேண்டியிருக்கிறது. குறைந்த கூலி பெற்ற நிலையில், அந்தத் தொகையிலிருந்து தான் மாமுல் கொடுக்க வேண்டும். பொங்கல் தீபாவளி போனஸ் கடந்த இரண்டு வருடங்களாக வழங்கவில்லை. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த நெல்லை தரமற்ற நெல் என்று சிரமப்படுத்தி வருகின்றனர். இப்படி துன்புறுத்தி வரும் அதிகாரிகளைக் கண்டித்தும் கூலியை உயர்த்தி நேரடியாக வழங்க வலியுறுத்தியும் வரும் மார்ச் மாதம் 4ம் தேதி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் உள்ள சுமைதூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என தெரிவித்தார்.

Related Stories: