நீடாமங்கலம் பகுதியில் இயந்திரம் மூலம் நெல் அறுவடை பணி தீவிரம்

நீடாமங்கலம், பிப். 11: திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக பருவமழை பொய்த்ததாலும், மேட்டூர் அணையில் காலத்தில் தண்ணீர் திறக்காததால் சிறு குறு விவசாயிகள் சாகுபடி செய்ய முடியாமல் இருந்தனர். சிலர் மின் மோட்டாரை பயன்படுத்தி நிலத்தடி நீரில் சாகுபடி செய்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் வடகிழக்கு பருவமழை விவசாயிகளுக்கு நல்ல ஒத்துழைப்பை கொடுத்து மூன்று முறை மேட்டூர் அணை நிரம்பியது. சிறு குறு பெரும் விவசாயிகள் பருவமழையினாலும்,மேட்டூர் அணையிலிருந்து போதிய நீர் திறந்தவுடன் சாகுபடியை தொடங்கினர்.

சாகுபடியை தொடங்கி உரமிடும் நேரத்தில் தொடர்ந்து பெய்த பருவமழையால் இளம் பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகளை பாதிப்பில் ஏற்படுத்தியது. வயல்களில் தேங்கி நின்ற மழை நீரை விவசாயிகள் வடிய வைத்து வேளாண்மை துறை அதிகாரிகள் ஆலோசனைபடி உரமிட்டு பயிர்களை வளர்த்தனர். அப்படி பயிர்கள் வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்த போது திடீரென தொடர்ந்து பெய்த மழையால் நெல் பயிர்கள் பல்வேறு இடங்களில் தரையில் படிந்து முளைக்க தொடங்கியது. இந்நிலையில் அருவடை செய்ய இயந்திரம் தட்டுப்பாடும் இந்த ஆண்டு ஏற்பட்டது. விவசாயிகளுக்கு அடிமேல் அடி விழுந்தாலும் அதனை சரி செய்து தற்போது நீடாமங்கலம் வேளாண்மை கோட்ட பகுதிகளில் இயந்திரம் மூலம் அறுவடை பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories: