கும்பகோணம் பீமன் தெருவில் நகராட்சி அலட்சியம் சாக்கடையில் அடைப்பை அகற்றும் தெருவாசிகள்

கும்பகோணம், பிப்.11: கும்பகோணம் நகராட்சிக்குட்ப்பட்ட பீமன் தெருவில் பல ஆண்டுகளாக சாக்கடையை சுத்தம் செய்யாததால், அதனை தெருவாசிகள் சுத்தம் செய்யும் நிலை. துர்நாற்றத்தால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கும்பகோணம் நகராட்சிக்குட்ப்பட்ட பீமன் தெருவில்பீமன் தெருவில் சுமார 50 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், 100 க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள், பள்ளிகூடம், கோயில்கள், அரசு அலுவலகங்கள் உள்ளன. மேலும், இந்த தெருவின் வழியாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனை, அனைத்து அரசு அலுவலகங்கள், கோர்ட் உள்ளிட்ட அனைத்து பகுதிற்கு செல்வதற்கு பிரதான தெருவாகும். இதனால் பகலில் பொது மக்கள் நடமாட்டமும், வாகனங்கள் அதிகமாக வந்துசெல்லும்.

இந்நிலையில், பீமன் தெருவிலுள்ள கழிவு நீர் சாக்கடையை சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக சுத்தம் செய்யாமலும், துார் வாராமல் விட்டு விட்டனர். இதனால் கழிவு நீர் சாக்கடை முழுவதும் மண் மற்றும் கழிவுகள் தேங்கியது.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆம்ரூட் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. அப்போது குழாய்களை பதித்து விட்டு, அரைகுறையாக பணிகளை செய்து, பள்ளத்தை மூடி சென்றதால், அப்பகுதியில் உள்வாங்கியது. இதனால் வாகனங்கள் விபத்து அடிக்கடி நடந்ததால், நகராட்சி நிர்வாகம் மண்ணை கொட்டியது. தற்போது அதிலுள்ள மண் மற்றும் கழிவுகளை சாக்கடையில் சென்றதால், சாக்கடை முழுவதும் கழிவு மண்ணாகி, கழிவு நீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் அருகிலுள்ள வீடுகளுக்குள்ளும், தெருக்களிலும் கழிவு நீர் தேங்கியதால், வீட்டிற்குள்ளும், அருகிலுள்ள பள்ளிகூடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், கழிவுகள் அனைத்து மிதந்து வந்ததால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. கொசுக்களின் தொல்லை அதிகரித்ததால், அந்த தெருவாசிகள் மிகவும் சிரமத்திற்குள்ளானார்கள். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகாரளித்தனர்.

அவர்கள் கண்டு கொள்ளாமல் இருந்ததால், ஆத்திரமடைந்த அந்த தெருவாசிகள், பல ஆண்டுகளாக துார் வாராமலும், சுத்தம் செய்யாமல் இருந்த சாக்கடையில் இறங்கி, கழிவுகளை அகற்றினர்.

இதனால் அந்த தெருவில் தற்காலிகமாக கழிவு நீர் தேங்காமல் வடிந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சாக்கடை அடைத்து கொண்டு, கழிவு நீர் தேங்கியுள்ளது என நகராட்சி நிர்வாகத்திடம் புகாரளித்தோம், அவர்கள் வந்து, ரூ. 3 ஆயிரம் பணம் கொடுத்தால் தான் சுத்தம் செய்ய முடியும் என பதில் கூறி விட்டு, பணம் தராததால், அப்படியே விட்டு சென்று விட்டனர். எனவே, நகராட்சி நிர்வாகம், பீமன் தெருவிலுள்ள சாக்கடையை பல ஆண்டுகளாக துார் வாராமல் இருப்பதால், உடனடியாக சாக்கடையை துார் வாரி, அப்பகுதியை சுகாதாரமாக்கிட வேண்டும், இல்லையெனில் அப்பகுதியினரை திரட்டி போராட்டம் செய்யப்படும் என அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: