தஞ்சாவூர் பகுதியில் பலாப்பழம் விற்பனை அமோகம்

 

தஞ்சாவூர், ஏப்.26: தஞ்சை அடுத்து மாரியம்மன் கோயில் பகுதியில் சாலைகளில் பலாப்பழம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்திற்கு மற்ற பழங்களை காட்டிலும் மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் கோடை துவங்கியதுமே முக்கனிகளின் வரத்து அதிகரிக்கும். அதிலும் பலாப்பழத்திற்கு என தனி மவுசு உண்டு. தற்போது பலாப்பழம் சீசன் துவங்கியுள்ளதால் தஞ்சாவூர்- நாகப்பட்டினம் சாலையான மாரியம்மன் கோவில் அருகே பழங்கள் குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

கோடை காலம் ஆரம்பித்த நிலையில் தஞ்சாவூர் இபி காலனி பகுதிகளில் பலாப்பழம் வரத்து அதிகரித்துள்ளது. இந்த பழத்திற்கு அதிக சுவை உள்ளதால் வியாபாரிகள் அதிகளவு அங்கிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஒரு பழம் ஐந்து கிலோ முதல் 50 கிலோ எடை வரை உள்ளது. பலாப்பழத்தின் சுளைகள் பெரிதாகவும், சுவை மிகுந்ததாகவும் உள்ளது.பழத்திற்கு தகுந்தவாறு 80 முதல் 600 ரூபாய் வரை விற்பனை செய்கிறோம்.

பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். விற்பனையும் நன்றாக உள்ளது. பலாப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி இருப்பதால், இது ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த பழம் இந்த பழத்தை சாப்பிட்டால், உடலை பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்காமல் பாதுகாக்கிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள பழம் என்றால் அது பலாப்பழமே. மேலும் இது அல்சர், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மையை உடையது.

The post தஞ்சாவூர் பகுதியில் பலாப்பழம் விற்பனை அமோகம் appeared first on Dinakaran.

Related Stories: