கும்பகோணத்தில் பெண்னை கொலை செய்த வழக்கு: தையல் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

தஞ்சாவூர்,ஏப்.28: கும்பகோணத்தில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் தையல் தொழிலாளிக்கு தஞ்சாவூர் கோர்ட் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கும்பகோணம் மாதுளம்பேட்டை பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (44). தையல் தொழிலாளி. இவர் கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி குடி போதையில் வீட்டுக்கு வெளியில் தகராறு செய்துள்ளார். இது தொடர்பாக இவருக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த கருப்பசாமி மனைவி தமிழ்ச்செல்விக்கும் (60) தகராறு ஏற்பட்டது. இதில், தமிழ்ச்செல்வியை சரவணன் கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த தமிழ்ச்செல்வி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அங்கு அவர் உயிரிழந்தார்.இது குறித்து கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர்ராஜன் குற்றம் சாட்டப்பட்ட சரவணனுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

The post கும்பகோணத்தில் பெண்னை கொலை செய்த வழக்கு: தையல் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Related Stories: