மதுக்கூர் அருகே அத்திவெட்டியில் வேளாண் கண்காட்சி

 

பட்டுக்கோட்டை, ஏப். 24: பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் வட்டாரத்தில் மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி வழிகாட்டுதலின்படி வேளாண் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவர்கள் சார்பில் வேளாண் கண்காட்சி அத்திவெட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் நடந்தது. இதில் வேளாண் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு இயற்கை மூலப்பொருள்கள், ரசாயன மூலப்பொருள்கள், உயிரியல் காரணிகளை காட்சிப்படுத்தினர்.

கண்காட்சியில் இனக்கவர்ச்சி பொறி, மஞ்சள் அட்டை பொறி, விளக்கு பொறி, பாரம்பரிய நெல் வகைகள், ரத்த கவுனி, தங்கசம்பா, தூயமல்லி, மாப்பிள்ளை சம்பா மற்றும் தென்னையை தாக்கும் பூச்சிகள் சுருள் வடிவ வெள்ளை ஈ, காண்டாமிருக வண்டு, சிவப்புக் கூண் வண்டு, சாம்பல் நிற வண்டு, இயற்கை இடுபொருட்களான பசுந்தாள் உரம், அமிர்த கரைசல், பஞ்சகவ்யம், பூச்சிவிரட்டி மற்றும் தென்னையில் நோய் தாக்கம் தஞ்சை வாடல் நோய், சாம்பல் கருகல் நோய்,

தென்னை கரும்பூஞ்சான் நோய் மற்றும் மா, உளுந்து, வேர்கடலை போன்ற பயிர்களில் ஏற்படும் நோய் தாக்கங்களை காட்சிப்படுத்தியிருந்தனர். மேலும் நெல் வயலில் வளரும் களைகளும் காட்சிப்படுத்தப்பட்டன. கண்காட்சியை கிராம பொதுமக்கள் மற்றும் இயற்கை தென்னை விவசாய குழுவின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் பார்வையிட்டு வேளாண் கல்லூரி மாணவர்களுடன் உரையாடினர்.

The post மதுக்கூர் அருகே அத்திவெட்டியில் வேளாண் கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: