சூளகிரியில் அரசு பள்ளி மாணவிகளுக்கு தொழுநோய் விழிப்புணர்வு

சூளகிரி, பிப்.4: சூளகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொழுநோய் மற்றும் டெங்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சுகாதார துறை சார்பில் நடத்தப்பட்டது.  நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் நாகவள்ளி தலைமை வகித்தார். வட்டார சுகாதார மருத்துவர் வெண்ணிலா, சுகாதார மேற்பார்வையாளர் ராஜாமணி, சுகாதார ஆய்வாளர்கள் தினேஷ், விஜயன், சக்தி மற்றும் பலர் கலந்துகொண்டு தொழு நோய், டெங்குவின் அறிகுறிகள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினர். தொடர்ந்து, உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். ஆசிரியர் ஜோதிலட்சுமி தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு பாடல்களை பாடி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

Related Stories: