சாமந்தி பூக்கள் விளைச்சல் அமோகம்

ராயக்கோட்டை, டிச.18: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையில் காய்கறி சாகுபடிக்கு அடுத்து பூக்கள் சாகுபடி பிரதனமாக உள்ளது. கேரட், தக்காளி, உருளை கிழங்கு மற்றும் புடலங்காய், பாகற்காய் மற்றும் முட்டைகோஸ் என அனைத்து காய்கறிகள் அதிகளவில் ராயக்கோட்டையில் இருந்து, தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதே போன்று காய்கறிகளுக்கு அடுத்து பூக்கள் சாகுபடியில் சாமந்தி அதிகம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த தீபாவளி மற்றும் ஆயுத பூஜைக்காக ராயக்கோட்டை பகுதியில் இருந்து சாமந்திப்பூக்கள் அதிகம் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சீசன் புதிதாக சாமந்திப்பூக்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், மிட்டப்பள்ளி கிராமத்தில் தோட்டம் நன்றாக செழித்து பூக்கள் பூத்துக் குலுங்குவதால் அதற்கு மருந்தடித்து பராமரித்து வருகின்றனர்.

Related Stories: