போச்சம்பள்ளி, டிச.17: கிருஷ்ணகிரி வட்ட வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தின் போச்சம்பள்ளி கிளையில், நேற்று கொப்பரை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி, அரசம்பட்டி, புளியாண்டப்பட்டி, பாளேத்தோட்டம், ஆனந்தூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த தென்னை விவசாயிகள், 5 டன் கொப்பரையை கொண்டு வந்திருந்தனர். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் கொப்பரை கிலோ ரூ.90 முதல் ரூ.180 வரை விற்பனையானது. கடந்த வாரத்தை காட்டிலும் நல்ல விலை கிடைத்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
5 டன் கொப்பரை ஏலத்தில் விற்பனை
- போச்சம்பள்ளி
- கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கம்
- கிருஷ்ணகிரி
- அரசம்பட்டி
- புளியந்தபட்டி
- பாலத்தோட்டம்
- ஆனந்தூர்
