ஊத்தங்கரை, டிச.12: ஊத்தங்கரையில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நேதாஜி தலைமை வகித்தார். துணைத் தலைவர் சக்திவேல், வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் நஜீம், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலிட பார்வையாளர்கள் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் னிவாஸ், மாநிலத் துணைத் தலைவர் பெனிஸ், மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில செயலாளர் ஆறுமுகம், காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் குமரேசன், தெற்கு வட்டாரத் தலைவர் தனஜெயன், நகர தலைவர், விஜிகுமார், சசிகுமார், கதிரவன், கேசவன், வினோத் குமார், பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்
- இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்
- ஊத்தங்கரை
- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்
- மாவட்ட இளைஞர் காங்கிரஸ்
- ஜனாதிபதி
- நேதாஜி
- துணை ஜனாதிபதி
- சக்திவேல்
- பிராந்திய இளைஞர் காங்கிரஸ்
- சத்தியமூர்த்தி
- கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி…
