மனநலம் பாதித்த மூதாட்டி மாயம்

கிருஷ்ணகிரி, டிச.17: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த பொம்மதாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. இவரது மனைவி விஜயா (50). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த 13ம் தேதி, வீட்டை விட்டு வெளியே சென்ற விஜயா, பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து விஜயாவின் மகன் முருகேசன், கெலமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Related Stories: