திண்டுக்கல் காந்திஜி பள்ளியில் பெண்கள் முன்னேற்றம் ஆளுமை ேபாட்டிகள் மாணவ, மாணவிகள் ஆர்வம்

திண்டுக்கல், ஜன. 24: திண்டுக்கல் காந்திஜி பள்ளியில் நடந்த பெண்கள் முன்னேற்றம், ஆளுமை வலியுறுத்தி நடந்த போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். திண்டுக்கல் காந்திஜி பள்ளியில் பெண்கள் முன்னேற்றம் மற்றும் ஆளுமையை வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை, தானம் அறக்கட்டளை இணைந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தியது. பெண்ணின் மேம்பாடு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடந்த கட்டுரை, ஓவியம், வாசகம் ஆகிய போட்டிகளில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 33 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த 370 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நாளை ஜன.25ம் தேதி மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடக்கும் பேரணி நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற 3 பேருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். இதில் சுற்றுச்சூழல் மன்ற அலுவலர் ஹரிஹரசுதன், தானம் அறக்கட்டளை திண்டுக்கல் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஐயப்பன் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: