திருத்துறைப்பூண்டி பகுதியில் 10,726 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்

திருத்துறைப்பூண்டி, ஜன. 20: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் சுகாதார துறை சார்பில் 5 வயதுக்குட்பட்ட 2,292 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. ஆலத்தம்பாடி ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் கவுரி 5 வயதுக்கு ட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி பணியை துவக்கி வைத்தார். நகர அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சாருமதி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் | வெங்கடாசலம் மற்றும் சுகாதாரதுறை அலுவலர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர். நகராட்சி பகுதிகளில் 15 முகாம்களிலும் 5 வயதுக்குட்பட்ட 2,292 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதே போல் திருத்துறைப்பூண்டி ஒன்றிய பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் கிராமப்பகுதிகளில் உள்ள 68 முகாம்களில் 8434 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. ஒன்றிய, நகர பகுதியில் 10,726 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது என்று வட்டார மருத்துவ அலுவலர் கவுரி தெரிவித்தார்.

Related Stories: