பேச்சுவார்த்தையில் உடன்பாடு விற்பனைக்கு வந்த வாழைத்தார்கள் குடந்தையில் புதிதாக கட்டப்பட்ட தாலுகா அலுவலகம் திறப்பு

குபகோணம், ஜன. 14: கும்பகோணத்தில் புதிதாக கட்டப்பட்ட தாசில்தார் அலுவலகத்தை சென்னையில் இருந்து காணொளி காட்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். கும்பகோணம் கச்சேரி சாலையில் ரூ.2 கோடியே 34 லட்சம் மதிப்பில் நவீன முறையில் புதிய தாசில்தார் அலுவலகம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. சென்னை தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு தஞ்சை கலெக்டர் கோவிந்தராவ் குத்து விளக்கேற்றி இனிப்புகளை வழங்கினார். எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், ஒன்றியக்குழு தலைவர் காய்த்ரி அசோக்குமார், ஒன்றியக்குழு துணை தலைவர் கணேசன், கோட்டாட்சியர் வீராச்சாமி, தாசில்தார் பாலசுப்பிரமணியன், அதிமுக நகர செயலாளர் ராமநாதன், நிலவள வங்கி தலைவர் அறிவழகன், திமுக ஒன்றிய செயலாளர் அசோக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பாபநாசம்: பாபநாசம்- கோபுராஜபுரம் சாலையில் புதிதாக தாலுகா அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது. இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதைதொடர்ந்து தாலுகா அலுவலக கட்டிடத்தில் கலெக்டர் கோவிந்தராவ் குத்து விளக்கேற்றினார். சார் ஆட்சியர் வீராசாமி, பாபநாசம் தாசில்தார் கண்ணன், பாபநாசம் ஆர்ஐ ராஜ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: