பாபநாசம் சிறை கைதிகளிடம் நீதிபதி விசாரணை

பாபநாசம், ஜன. 14: பாபநாசம் கிளை சிறையில் ஜெயில் அதாலத் நிகழ்ச்சி நடந்தது. பாபநாசம் கோர்ட் நீதிபதி சிவக்குமார் பங்கேற்று கைதிகளிடம் நேரடி விசாரணை நடத்தினார். அப்போது விசாரணை கைதியாக 6 மாதத்துக்கு மேல் யாரேனும் உள்ளனரா, மனித உரிமை மீறப்படுகிறதா என்று விசாரணை நடத்தினர். மேலும் மணல் திருட்டில் ஈடுபட்டு சிறைச்சாலையில் இருப்பவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் வாழ்க்கை முறையை மாற்றி கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இதைதொடர்ந்து மது விற்பனை செய்பவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் குழந்தைகளின் நலன்கருதி மது அருந்துவதையும், மது விற்பனை செய்வதையும் தவிர்க்க வேண்டும் என்றார். ஜெயில் அதாலத்தில் வக்கீல் சதீஷ், நீதிமன்ற ஊழியர் கர்ணன் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழு சட்ட பணியாளர் தனசேகரன் செய்திருந்தார்.

Related Stories: