வாலாஜாபாத் அகத்தியா பள்ளியில் புத்தாக்க அறிவியல் கண்காட்சி

வாலாஜாபாத், ஜன. 10: வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 2019-2020ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான புத்தாக்க அறிவியல் கண்காட்சியை கலெக்டர் பொன்னையா நேற்று தொடங்கி வைத்தார். இதில் அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளை சேர்ந்த 55 மாணவ, மாணவிகள், அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளை  சேர்ந்த 28 மாணவ, மாணவிகள், அரசு உதவிபெறும், மெட்ரிக் உயர்நிலை,  மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த 4 மாணவ, மாணவிகள், சிபிஎஸ்இ பள்ளிகளை  சேர்ந்த 13 மாணவ, மாணவிகள் என மொத்தம் 100 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பென்னையா பேசியதாவது:தமிழகத்தில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது பணிகளை தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையம் நிறைவேற்றி வருகிறது. இந்த கண்காட்சியில் மாணவர்கள் அறிவியல் படைப்பு விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து சிறந்த படைப்புகள் வல்லுநர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

 மாவட்ட அளவிலான கண்காட்சியின்போது தேசிய புத்தாக்க நிறுவனம் சார்பாக வல்லுநர்கள் வருகை புரிந்து சிறந்த கண்டுபிடிப்புகளை தேர்வு செய்ய உள்ளனர். இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் மாநில அளவிலான கண்காட்சியில் கலந்து கொள்வார்கள். பள்ளி மாணவ, மாணவிகள் அறிவியல் கண்காட்சிகளை சம்பிரதாய நிகழ்வாக மட்டுமே கருதாமல் இன்றைய நடைமுறையில் சமுதாய மேம்பாட்டிற்கு தேவையான தொழில்நுட்பத்தில் பங்கு பெறும் விதமாக படைப்புகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, மாவட்ட கல்வி அலுவலர்கள் தாமோதரன், கிருஷ்ணன், நாராயணன், இராதாகிருஷ்ணன், வாலாஜாபாத் அகத்தியா பள்ளி தாளாளர் அஜய்குமார், பள்ளி செயலர் சாந்தி அஜய்குமார் மற்றும் அரசு பள்ளிகளை சார்ந்த தலைமை ஆசிரியர்கள், ஆசியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: