மனவளர்ச்சி குன்றியோர் மையத்தில் கலெக்டர் ஆய்வு

திருப்ேபாரூர், மே 4: திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய கோவளத்தில் மனவளர்ச்சி குன்றியோருக்கான பான்யன் என்ற தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில், மனவளர்ச்சி குன்றியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது. மேலும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் சுய தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்த மனவளர்ச்சி குன்றியோருக்கான மையத்தில் நேற்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் நேரில் பார்வையிட்டார். பான்யன் தொண்டு நிறுவனத்தின் சார்பில், மனவளர்ச்சி குன்றியோருக்கு அளிக்கப்படும் மசாலா தயாரிப்பு, தையல் பயிற்சி, வயர் கூடை பின்னுதல், பேட்டரி வாகனம் மூலம் உணவு சப்ளை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை பார்வையிட்ட கலெக்டர், அவற்றை வியந்து பாராட்டினார். ஆய்வின்போது, திருப்போரூர் வட்டாட்சியர் பூங்கொடி, கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா தங்கம் சுந்தர் ஆகியோர் உடனிருந்தனர்.

The post மனவளர்ச்சி குன்றியோர் மையத்தில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: