வீட்டு வசதி வாரிய அலுவலகம் இடமாற்றம்

ஈரோடு, ஜன.3: ஈரோடு வீட்டுவசதி வாரிய பிரிவு அலுவலகம் சூரம்பட்டி நால் ரோட்டில் செயல்பட்டு வந்தது. தற்போது, இந்த அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு சம்பத்நகர் மெயின்ரோடு ஈரோடு கேஸ் ஏஜென்சீஸ் அருகில் உள்ள சமுதாய கட்டிடத்தில் செயல்படுகிறது. எனவே, அனைத்து ஒதுக்கீடுதாரர்களும், பொதுமக்களும் ஈரோடு வீட்டுவசதி வாரிய பிரிவு அலுவலகத்தினை இந்த முகவரியில் தொடர்பு கொள்ள வீட்டுவசதி வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

Related Stories: