பிரசாந்தி வித்யாபவன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

ஈரோடு, டிச. 31:  ஈரோடு சின்னியம்பாளையம் பிரசாந்தி வித்யாபவன் மெட்ரிக் பள்ளியில் அறிவியல் காண்காட்சி நடந்தது. இக்கண்காட்சியில் பள்ளி மாணவ-மாணவிகள் தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர். இதில் சாம் என்ற மாணவன் நில நடுக்கத்தை முன்கூட்டியே அறிய கூடிய கருவியையும், விஷ்ணுபிரியன் என்ற மாணவன் காதுகேளாதோர், வாய்பேச முடியாத நபர்களின், அவர்களால் செய்ய முடியாத செயல்களை அறியும் கருவியையும் காட்சிப்படுத்தினர். மகதி என்ற மாணவி மழை எவ்வாறு பெய்கிறது குறித்தும் விளக்கி கூறினார். இந்த கண்காட்சியில் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை ஆர்வத்துடன் பார்வையிட்டு சென்றனர்.

Related Stories: