சீர்காழியில் வாழை பயிர்களுக்கு காப்பீடு செய்ய தோட்டக்கலைத்துறை அழைப்பு

சீர்காழி, டிச.30: சீர்காழியில் வாழைக்கு காப்பீடு செய்து பயன்பெறுமாறு தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது. நாகை மாவட்டம் செம்பனார்கோயில் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் பொன்னி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சீர்காழி வட்டத்திற்கு நடப்பாண்டு 2019-20 ரபீ பட்டத்துக்கு வாழை பயிர்களுக்கான பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது. வாழைக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.3,065 பிரீமியம் செலுத்தி ஒரு எக்டேருக்கு ரூ.151, 141 இழப்பீடாக பெறலாம். வாழை பயிர் காப்பீடு செய்ய சீர்காழி சரகத்தில் 4 கிராமங்கள், திருவெண்காடு சரகத்தில் 6 கிராமங்கள், வைத்தீஸ்வரன் கோயில் சரகத்தில் 5 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. எனவே வாழை சாகுபடி செய்து வரும் விவசாயிகள் தங்களது பயிரை இயற்கை சீற்றங்களான புயல், கனமழை, கடும் வறட்சி, பூச்சிகள் மற்றும் நோய்களால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு ஈடுசெய்யும் பொருட்டு பயிர் காப்பீடு செய்யலாம்.

காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் சீர்காழி வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். மேலும் பயிர் காப்பீடு செலுத்த தங்கள் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலோ அல்லது பொது. சேவை மையத்திலேயே காப்பீடு செய்து கொள்ளலாம். பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் பிப்ரவரி 28ம் தேதி ஆகும். எனவே இந்த வாய்ப்பினை வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் காப்பீடு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் தொலைபேசி எண்-9488004522, 9786812586, 8637436987 ஆகிய எங்களை தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: