தஞ்சை, டிச. 18: தஞ்சையில் மின்வாரிய கேங்மேன் தேர்வில் முதல் பெண் தேர்வு பெற்றார்.தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தஞ்சை மின் பகிர்மான வட்டத்தில் கேங்மேன் பணிக்கான உடற்தகுதி தேர்வு கடந்த 9ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் ஆண்கள், பெண்கள் பங்கேற்று தேர்வாகி வருகின்றனர். இதுவரை பெண்கள் யாரும் தேர்வாகவில்லை.