கொள்ளிடம், டிச.18: கொள்ளிடம் அருகே கொடியம்பாளையம் தீவு கிராமம் உள்ளது. இங்கு 1500 வாக்காளர்கள் வசிக்கின்றனர். ஒவ்வொரு தேர்தலின் போதும் இந்த கொடியம்பாளையம் ஊராட்சியில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்படுவது வழக்கம்.இந்நிலையில் நேற்று முன்தினம் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிவு பெற்றது. இந்த ஊராட்சியின் சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கலியபெருமாள் மகன் காமராஜ் (39)என்பவர் மட்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். இவரை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதே போல் இந்த ஊராட்சியைச் சேர்ந்த 6 வார்டு உறுப்பினர்களுக்கு லலிதா, குழந்தைவேல், அனுசுயா, சூர்யா, தங்கமணி, ராஜசேகர் ஆகிய 6 பேர்கள் மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். இவர்கள் போட்டியின்றி தேர்வாகின்றனர்.