நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி வாரியாக நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசனை

 

காரைக்கால்,அக்.20: நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிவாரியான நிர்வாகிகள் நியமனம் குறித்து சந்திர பிரியங்கா எம்எல்ஏ ஆலோசனை நடந்தது. காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிவாரியான நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசனை கூட்டம் கோட்டுச்சேரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு புதுச்சேரி முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும் இப்போதைய நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா எம்எல்ஏ தலைமை வகித்தார்.

கூட்டத்தில் நெடுங்காடு கோட்டுச்சேரி பகுதியை சேர்ந்த என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்களிடம் தொகுதி மேம்பாட்டு பணிகள் குறித்தும்,என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிவாரியான நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். மேலும் இக்கூட்டத்தில் தனது தீபாவளி வாழ்த்துக்களை கட்சி பிரமுகர்களிடம் இனிப்பு வழங்கி தெரிவித்தார். இந்நிகழ்வில் என்.ஆர் காங்கிரஸ் பிரமுகர்கள், இளைஞர்கள் மற்றும் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

The post நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி வாரியாக நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: