குத்தாலம் அருகே திருமணஞ்சேரி உத்வாகநாத சுவாமி கோயிலில் 8 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

குத்தாலம், அக்.24: குத்தாலம் தாலுகா திருமணஞ்சேரி உத்வாகநாதசுவாமி கோயிலில் இந்து அறநிலையத்துறை சார்பில் 8ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி ஊராட்சியில் உள்ள அருள்மிகு உத்வாகநாத சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இணைகளுக்கான திருமண விழா மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 8 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வின்போது, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, முன்னாள் எம்எல்ஏ சத்யசீலன், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுவாமிநாதன், குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன், உதவி ஆணையர் ரவிசந்திரன், குத்தாலம் ஒன்றிய ஆணையர் புவனேஸ்வரி, குத்தாலம் தாசில்தார் சத்யபாமா, குத்தாலம் ஒன்றியக்குழு துணைத் தலைவர் முருகப்பா, செயல் அலுவலர் விமலா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் விஜயாராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மனோகரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜேஸ்வரிசங்கர், ராமதாஸ், திருமணஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், ஒன்றிய செயலாளர்கள் வைத்தியநாதன், இமயநாதன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஜீவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மணமக்களுக்கு மாங்கல்யத்துடன் சீர்வரிசைப் பொருட்களாக கட்டில் பீரோ, மெத்தை, தலையணைகள், சமையல் எரிவாயு அடுப்பு, கிரைண்டர், மிக்சி, குக்கர், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.

The post குத்தாலம் அருகே திருமணஞ்சேரி உத்வாகநாத சுவாமி கோயிலில் 8 ஜோடிகளுக்கு இலவச திருமணம் appeared first on Dinakaran.

Related Stories: