காரைக்காலில் பழைய இரும்பு கடையில் மலைபோல் குவிந்து கிடக்கும் அரசு இலவச சைக்கிள்கள்

 

காரைக்கால்,அக்.25: பழைய இரும்பு கடையில் மலைபோல் குவிந்து கிடக்கும் அரசு மாணவர்களின் இலவச சைக்கிள்கள். ரூ.1000க்கு விற்பனை செய்யப்படுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. புதுச்சேரி அரசு கல்வித்துறை மூலம் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்கள் வழங்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வந்தன.

கடந்த ஆண்டு காரைக்காலில் உள்ள மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் தரமற்ற நிலையில் வழங்கப்பட்டதாக மாணவ மாணவிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்ததை அடுத்து அமைச்சர் திருமுருகன் தரமற்ற சைக்கிள்களை மாணவர்களுக்கு வழங்க கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனிடையே காரைக்கால் புறவழிச்சாலையில் உள்ள பழைய இரும்பு கடையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் அரசின் இலவச சைக்கிள்கள் மலை போல் குவிக்கப்பட்டு சைக்கிள்கள் தலா 1000 வீதம் விற்பனை செய்யப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சந்திரமோகன் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

The post காரைக்காலில் பழைய இரும்பு கடையில் மலைபோல் குவிந்து கிடக்கும் அரசு இலவச சைக்கிள்கள் appeared first on Dinakaran.

Related Stories: