நாகப்பட்டினம் காவல்துறை சார்பில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு

 

நாகப்பட்டினம், அக்.22: இந்தியா சீனா எல்லை பகுதியில் கடந்த 1959ம் ஆண்டு நடந்த மோதலில் எல்லை பாதுகாப்பில் ஈடுபட்ட 20 இந்திய காவலர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை நினைவுக்கூறும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21ம் தேதி தேசிய அளவில் தேசிய காவலர்கள் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதை முன்னிட்டு நேற்று நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர்கள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. எஸ்.பி அருண்கபிலன் தலைமை வகித்தார். ஆயுதப்படை காவலர்கள் 60 துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீசார் அணிவகுப்பு மரியாதை செய்தனர்.

The post நாகப்பட்டினம் காவல்துறை சார்பில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: