நாகப்பட்டினத்தில் 26ம்தேதி தொழில் நுட்ப பணிகளுக்கான தேர்வு

 

நாகப்பட்டினம்,அக்.25: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நாளை(26ம் தேதி) முற்பகல் மற்றும் பிற்பகல் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பணிகள்) அதாவது (Combined Technical Services Examination, Non – Interview Posts) அடங்கிய பணிகளுக்கான தேர்வு ஏடிஎம் மகளிர் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்த தேர்வில் 638 தேர்வர்கள் பங்கேற்கவுள்ளனர். இத்தேர்வு சிறப்பாக நடைபெற 2 முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 1 பறக்கும்படை அலுவவரும், 1 சுற்றுக்குழு அலுவலர்களும், 2 ஆய்வு அலுவலர்களும், 3 வீடியோ கிராபர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு மைய பாதுகாப்புப் பணிக்கு காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு மையத்திற்கு வருகை தர வசதியாக சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பம் செய்துள்ளவர்கள் தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணிக்கு முன்னதாகவே வந்து விட வேண்டும். தேர்வு மையத்திற்கு செல்போன் மற்றும் இதர எலக்ட்ரானிக் சாதனங்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

The post நாகப்பட்டினத்தில் 26ம்தேதி தொழில் நுட்ப பணிகளுக்கான தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: