பொம்மிநாயக்கன்பட்டியில் நெற்பயிரில் புழு தாக்குதல்

தேவதானப்பட்டி, டிச. 12: தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெற்பயிரில் புழு தாக்குதல் அதிகரித்து வருகிறது. தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 250க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் நேரடி நெல் விதைப்பு செய்து ஒரு மாதமான நிலையில் நெற்பயிர்கள் உள்ளன. தற்போது கடுமையான பனி நிலவுவதால் புழு தாக்குதல் ஆங்காங்கே காணப்படுகிறது.

இது தவிர நுனி கருகல் நோயும் நெல் பயிரை தாக்கி வருகிறது. கடுமையான பனி மற்றும் மேகமூட்டத்துடன் சீதோஷ்ணநிலை இருப்பதால் நெல் பயிரில் நோய் மற்றும் புழு தாக்குதல் இருந்து வருகிறது. எனவே, புழு தாக்கிய பகுதிகளில் வேளாண்மைத்துறையினர் பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என்றும், மானிய விலையில் புழுக்களைக் கட்டுப்படுத்த மருந்துகள் வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: