தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?

ஆண்டிபட்டி, ஏப். 25: வறுத்தெடுக்கும் வெயிலை சமாளிக்க குளிர்பானம், இளநீர், கரும்பு ஜூஸ், சர்பத், கம்மங்கூழ், ஜஸ்மோர் மற்றும் பழச்சாறு வகைகளின் தற்காலிக கடைகளில் பானங்களில் குளிர்ச்சிக்காக ஐஸ்கட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஐஸ் கட்டிகள் தயாரிப்பதில் கடைபிடிக்கப்படும் சுகாதாரம் மக்களிடையே கேள்விக்குறியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பழக்கலவைகள் கலப்பதிலும் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதுபோல் சர்பத்களுக்கான மூலப்பொருள்களின் தரம் குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, கோடைகாலத்தில் தற்காலிக சர்பத் மற்றும் கரும்பு ஜூஸ் கடைகள் ஏற்படுத்தப்படும். இக்கடைகளில் வழங்கப்படும் ஜுஸ்களில் குளிர்ச்சிக்காக பயன்படுத்தப்படும் ஐஸ் கட்டிகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் தண்ணீர் சுகாதாரமிக்கதாக இருப்பதில்லை.
சாலையோர கடைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து அதன் தூய்மை நிலையை ஆராய வேண்டும். இந்த அவலத்தில் இருந்து காக்க அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா? appeared first on Dinakaran.

Related Stories: