காச நோய் கண்டறியும் முகாம்

விக்கிரவாண்டி, டிச. 12:  விக்கிரவாண்டி அருகே ராதாபுரம் கிராமத்தில் உள்ள வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கப்பியாம்புலியூர் கிராமத்தில் காசநோய் கண்டறியும் முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் வினோத் தலைமை தாங்கினார். டாக்டர் அர்ச்சனா மற்றும் காசநோய் பிரிவு மேற்பார்வையாளர்கள் சரவணன், சிலம்பரசன், செல்லதுரை, டெய்சி, விக்டோரியா ஆகியோர் கொண்ட குழுவினர் கப்பியாம்புலியூர் கிராமத்தில் முகாமிட்டு காச நோய் உள்ளவர்களை வீடு வீடாக சென்று ஆய்வு செய்தனர். காசநோய் சந்தேகம் உள்ள 45 நபர்களிடமிருந்து சளி பெறப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு காச நோய் குறித்து விழிப்புணர்வு செய்தனர். இதில் தொண்டு நிறுவன மேற்பார்வையாளர் ஹேமா, லிங்க் ஊழியர் லட்சுமி மற்றும் இஎஸ் செவிலியர் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: