கார்த்திகை தீப திருவிழாவையொட்டி குமாரமங்கலத்தில் அகல்விளக்கு தயாரிக்கும் பணி தீவிரம்

புவனகிரி, நவ. 27: கார்த்திகை மாதம் என்றாலே தீபத்திருவிழாதான் நம் அனைவரின் நினைவிலும் வரும். கார்த்திகை மாதம் பிறந்து சில நாட்களே ஆகியுள்ளது. இந்த ஆண்டு கார்த்திகை மாத தீப திருவிழா வருகிற டிசம்பர் மாதம் 10ம் தேதி கொண்டாடப்படுகிறது.கார்த்திகை தீப தினத்தன்று பொதுமக்கள் தங்களது வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றி வழிபடுவர். இதனால் அகல் விளக்கு விற்பனை இந்த நாட்களில் சூடு பிடிக்கும். இதையொட்டி சிதம்பரம் அருகே உள்ள குமாரமங்கலம் கிராமத்தில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. இக்கிராமத்தில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் களிமண்ணை பதப்படுத்தி ஆயிரக்கணக்கான அகல் விளக்குகளை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அகல்விளக்கு தயாரிக்கும் தொழிலாளர்களிடமிருந்து மொத்த விலைக்கு விளக்குகளை கொள்முதல் செய்யும் வியாபாரிகள், அதை கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்ய உள்ளனர். கார்த்திகை தீப திருவிழாவிற்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தற்போது சுறுசுறுப்பு அடைந்துள்ளது.

Related Stories: