வியாபாரிகள் புகார் இந்திரா காந்தி பிறந்த நாள்

கம்பம், நவ. 20: இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தியின் 102வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. கம்பம் நகர் காங்கிரஸ் சார்பில் கம்பம் காந்திசிலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகரத்தலைவர் போஸ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் இந்திரா காந்தியின் உருவப்பட்த்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தனர். பின்னர் பொதுமக்களுக்கு கட்சி சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டது. பொறுப்பாளர்கள் மனோகரன், கவிர் பாரதன், அசரப்அலி,  முத்துக்கண்ணு, அப்துல்பாசித், ராமலிங்கம், தீன், ராஜா முகம்மது, நாகராஜ், தங்கராஜ், மாயி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: