அமிர்தவல்லி சமேத நாகநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம்

திருத்துறைப்பூண்டி நவ.12: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னூர் தோளாச்சேரிகிராமத்தில் அமைந்துள்ள அமிர்தவல்லிசமேதநாகநாத சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.திருத்துறைப்பூண்டி அருகே உள்ள உவரிகிராமத்தில் அமைந்துள்ள இவ்வாலயம் மிகவும் பழமையானதாகும்.இவ்வாலயம் மிகவும் சிதிலமடைந்தநிலையில் இருந்ததை இப்பகுதிமக்கள் நன்கொடையாளர்கள் மற்றும் ஆலயநிர்வாக ஒத்துழைப்புடன் ரூ.5லட்சம் மதிப்பீட்டில் சீரமைத்து குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழாவை ஒட்டி யாகசாலை பூஜைகள், அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜைகளுடன் தொடங்கிநடைபெற்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை நான்காவது காலயாகசாலை பூஜைநிறைவடைந்தபின்னர் பூஜை செய்யப்பட்டகலசங்கள் வேதவிற்பன்னர்கள்நாதஸ்வரஇன்னிசை முழங்கஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு புனிதநீர் விமானகலசங்களில் ஊற்றப்பட்டது. பின்னர் அபிஷேகம், தீபாராதனைநடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. .மாலை சுவாமி வீதி உலா நடைபெற்றது.

Related Stories: