கஞ்சனூரில் காவிரி அன்னைக்கு சிறப்பு வழிபாடு

கும்பகோணம், நவ. 8: கும்பகோணம் அடுத்த கஞ்சனூர் மற்றும் கதிராமங்கலம் காவிரி ஆற்றங்கரையில் காவிரி அன்னைக்கு ஆராதனை செய்து நதிநீர் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்று கொள்ளப்பட்டது,அகில பாரதிய துறவியர் சங்கம் மற்றும் அன்னை காவேரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் 9ம் ஆண்டு அன்னை காவிரி திருவிழா மற்றும் காவிரி விழிப்புணர்வு துலா மாதம் தீர்த்த ரத யாத்திரை கஞ்சனூர் வந்தது. வடக்கு நோக்கி பாயும் காவிரி ஆற்றங்கரையில் காவிரி அன்னைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா ஆரத்தி நடந்தது. பின்னர் துறவிகளுக்கு பாத பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இதேபோல் கதிராமங்கலம் காவிரி ஆற்றங்கரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள காவிரி அன்னை மற்றும் ரதத்தில் வந்த உற்சவர் காவிரி அன்னைக்கு படித்துறையில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.

Advertising
Advertising

Related Stories: