பண்டாரவாடை ரயில்வே கேட் செல்லும் தார்ச்சாலை சேதம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

பாபநாசம், நவ. 7: பாபநாசம் அடுத்த பண்டாரவாடை ரயில்வே கேட்டுக்கு செல்லும் சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.பாபநாசம் அருகே பண்டாரவாடை பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள ரயில்வே கேட்டுக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. இந்த சாலை வழியாக தேவராயன்பேட்டை, மெலட்டூர் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல முடியும். தேவராயன்பேட்டை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள், ராஜகிரியில் உள்ள பள்ளிகளுக்கு இந்த சாலை வழியாக தான் நடந்து செல்கின்றனர்.இந்த சாலை வழியாக சைக்கிளில் செல்லும் மாணவர்கள் அடிக்கடி தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை வி்ரைந்து சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: