வாக்கு பதிவான இயந்திரங்கள் பூட்டி சீல் வைப்பு தஞ்சாவூர் மாவட்டம் கண்டியங்காடு பசுமை வாக்கு சாவடியில் வாக்களித்த வாக்காளர்களுக்கு விதைப்பந்து வழங்கல்

 

தஞ்சாவூர், ஏப். 21: தஞ்சாவூர் மாவட்டம் கண்டியங்காடு வாக்குசாவடி பசுமை வாக்குசாவடியாக அமைக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான வாக்காளர்கள் வாக்களித்தனர். அப்போது தேர்தல் பணியாளர்களால் வாக்காளர்களுக்கு விதைப்பந்து வழங்கப்பட்டது. தொடர்ந்து, மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்தும், சுற்றுச்சுழலுக்கு மாசு ஏற்படுத்தும் செயலை செய்யக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 வாக்குசாவடிகள் பசுமை வாக்குசாவடியாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மாவட்ட திட்ட அலுவலர் ராஜேஷ்வரி கூறுகையில்: வாக்களிப்பது எவ்வளவு அவசியமோ, அதற்கு இணையானது பசுமையை பாதுகாக்க வேண்டியதாகும். மாறி வரும் காலநிலையை எதிர் கொள்வதற்கு பசுமையை பாதுகாப்பதும், பராமரிப்பதும் முக்கியமானதாகும். அந்த வகையில் கண்டியங்காடு கிராமத்தில் அமைக்கப்பட்ட பசுமை வாக்குசாவடியில் வாக்காளர்களுக்கு விதைப்பந்து வழங்கினோம். இதற்காக ஒரு வாரத்திற்கு முன்பு 100 அங்கன்வாடி பணியாளர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டு 1000 விதைப்பந்து தயார் செய்து வாக்குசாவடியில் வைக்கப்பட்டது என்றார். பசுமையை பாதுகாக்க வாக்காளர்களுக்கு விதைப்பந்துகள் வழங்கியதை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டினர்.

The post வாக்கு பதிவான இயந்திரங்கள் பூட்டி சீல் வைப்பு தஞ்சாவூர் மாவட்டம் கண்டியங்காடு பசுமை வாக்கு சாவடியில் வாக்களித்த வாக்காளர்களுக்கு விதைப்பந்து வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: