திருத்துறைப்பூண்டி உழவர்சந்தை வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கும் அவலம்

திருத்துறைப்பூண்டி அக்.24: திருத்துறைப்பூண்டி பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் திருவாரூர் கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், உழவர் சந்தை வளாகத்தில் இருந்த பழுதடைந்த பழையகிடங்குகளை இடித்து அப்புறப்படுத்த ஒப்பந்ததாருக்கு டெண்டர் விடப்பட்டு ஒப்பந்ததாரர் கிடங்குகளை இடித்து அப்புறப்படுத்தியுள்ளனர், அப்போது கிடங்கின் தரைப்பகுதியில் இருந்த கலவை மணல் எடுப்பதற்காக ஒப்பந்த விதிகளை மீறிஆறடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டியுள்ளனர், இதனால் மழை நீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் அருகில் உள்ள பழைய அலுவலக கட்டிடம் உறுதித்தன்மையைஇழந்து இடிந்துவிடும் அபாயநிலையில் உள்ளது.

அருகில் உள்ள உழவர் சந்தை, ஒருங்கிணைந்த வேளாண் அலுவலக கட்டிடம் பாதிக்கப்படும் சூழ்நிலையும் உள்ளது. பின்புறம் உள்ள புதிய கிடங்கிற்கு நெல் ஏற்றி செல்லும் கனரகவாகனங்கள் சாலையில் சிக்கி கொள்ளும், மேலும் தண்ணீரில் ஏ.டி.எஸ் கொசு புழு உருவாகும் வாய்ப்பு உள்ளது. இதனால் தினமும் உழவர் சந்தை, வேளாண் அலுவலங்களுக்கு வந்து செல்லும் பொதுமக்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்படும் அபாயநிலைமைஉள்ளது.

வேளாண் அலுவலகத்திற்கு செல்லஅமைக்கப்பட்ட புதிய சாலை இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் புதிதாக கட்டப்படஉள்ள சுற்றுச்சுவர் பணிகளுக்கு தளவாட பொருட்கள் எடுத்து செல்ல முடியாதநிலைஉள்ளது.எனவே போர்க்காலஅடிப்படையில் நடவடிக்கை எடுத்து மழைநீரை அப்புறப்படுத்தி பள்ளத்தை மணல் கொண்டு நிரப்பிட வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

Related Stories: