நீடாமங்கலம் ஒன்றிய விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

நீடாமங்கலம், அக்.10: நீடாமங்கலத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் பயிர்காப்பீடு தொகை கிடைக்காததற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீடாமங்கலம் வேளாண்மை அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் ஒன்றிய தலைவர் பாரதிமோகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஞானமோகன், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் தமிழார்வன், டேவிட் , மணியரசன், ராதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் கடந்த ஆண்டு தாக்கிய கஜா புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சரியாக கணக்கெடுக்காமல் பல வருவாய் கிராமங்களுக்கும் பயிர் காப்பீடு தொகை கிடைக்காமல் போனதற்கு காரணமான வேளாண்மைதுறை, புள்ளியியல்துறை, பயிர் காப்பீடு முகவர்களை கண்டித்து பேசப்பட்டது. மேலும் தோட்டக்கலை, காடு வளர்ப்பு துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.வேளாண் அலுவலகம் மூலம் மாதத்தில் இருமுறை விவசாயிகளை கொண்ட குறை தீர்க்கும் கூட்டத்தை நடத்த கோரியும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் வரும் 14ம் தேதி ஒன்றியம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடைபெரும் என அறிவிக்கப்பட்டது.

Related Stories: