பாவை மகளிர் கல்லூரியில் தொழில்நுட்பக் கருத்தரங்கு

ராசிபுரம்,அக்.4: ராசிபுரம் பாவை கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரில், அனைத்து துறைகளும் இணைந்து  தொழில்நுட்ப கருத்தரங்கு நடத்தின.கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நடராஜன் குத்துவிளக்கேற்றினார். சிறப்பு விருந்தினராக சேலம் சௌடேஸ்வரி கல்லூரி பேராசிரியர் உமாசுவரூபா கலந்துகொண்டு கருத்தரங்கை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் நடராஜன் பேசுகையில், ‘ஒருவார காலம் கணினி அறிவியல், கணிதவியல், வேதியியல், பௌதீகவியல், ஆங்கிலம், வணிகவியல் போன்ற அனைத்து பாடப்பிரிவுகளில் கருத்தரங்குகள் நடைபெறுகிறது. இவற்றில் மேற்கொள்ளும் சிறிய முயற்சி கூட, பெரிய விளைவுகளை கல்விப்பயணத்தில் ஏற்படுத்தும். மாணவிகள் எப்பொழுதும் நல்ல விஷயங்களையும், புதுமையான விஷயங்களையும் தொடர்ந்து செய்ய முன்வர வேண்டும்,’ என்றார். சிறந்த ஆய்வு கட்டுரை சமர்ப்பித்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் பாவை கலை மற்றும் அறிவியல் கல்லூரி  முதல்வர் ராஜேஸ்வரி, துணை முதல்வர் விமலா, மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: