வலங்கைமான் ஒன்றியத்தில் 50 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நாளை நடக்கிறது

வலங்கைமான், அக். 1:வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 50 கிராம ஊராட்சிகளில் நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் அனை வரும் கலந்து கொள்ள வேண்டும் என ஒன்றிய ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார்.கிராம ஊராட்சிகளில் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் விபரம், ஊரகப்பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவினம் குறித்து விவாதித்தல், ஊட்டச்சத்து இயக்கம், பிளாஸ்டிக் உற்பத்தி தடை, முழு சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் குறித்து கிராமசபை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. எனவே கிராமசபை கூட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், கிராம அளவிலான கூட்டமைப்புகள், வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என வலங்கைமான் ஒன்றிய ஆணையர் சந்தானகிருஷ்ண ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Related Stories: