குட்டைகள் சீரமைக்கும் பணிகள் கலெக்டர் ஆய்வு

மாமல்லபுரம், செப். 19: மாமல்லபுரத்தில் குளம், குட்டைகள் சீரமைக்கும் பணிகளை கலெக்டர் பொன்னையா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் பழமை வாய்ந்த சோழிபொய்கை குளம் மற்றும் வண்ணாங்குட்டை ஆகியவை பராமரிப்பின்றி கோரைப்புற்கள், கருவேல மரங்கள் வளர்ந்து தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, சீர்குலைந்து கிடந்தன. இதனை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

இதைதொடர்ந்து, மல்லை நீர் நிலைகள் பாதுகாப்பு மற்றும் மீட்போர் சங்கம் சார்பில், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதிப்பெற்று பொக்லைன் இயந்திரம் மூலம் குளத்தில் உள்ள கருவேல மரங்கள், கோரைப்புற்கள், சகதிகள் ஆகியவற்றை அகற்றி, சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.இந்நிலையில், கலெக்டர் பொன்னையா, மாமல்புரத்தில் சீரமைக்கப்படும் குளம், குட்டைகளை நேற்று பார்வையிட்டு பணிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, திட்ட அலுவலர் ஸ்ரீதர், செங்கல்பட்டு ஆர்டிஓ செல்வம், மாமல்லபுரம் ஏஎஸ்பி பத்ரிநாராயணன், மல்லை நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் மீட்போர் சங்க செயலாளர் வீ.கிட்டு, ஆலோசகர் கிருஷ்ணராஜ், உறுப்பினர் ராமலிங்கம் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: