பொருளாதார கணக்கெடுப்பாளர்களுக்கு பயிற்சி வகுப்பு

விருத்தாசலம், செப். 19: மத்திய அரசின் புள்ளியியல் துறை சார்பில் தொடங்க உள்ள ஏழாவது பொருளாதார கணக்கெடுப்பு குறித்த பயிற்சி கூட்டம் விருதாச்சலத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தேசிய புள்ளியியல் முதுநிலை கண்காணிப்பாளர் ரவிவர்மா தலைமை தாங்கினார். கடலூர் மாவட்ட பொருளியல் மற்றும் புள்ளியியல் துணை இயக்குனர் சிவகங்கை, புள்ளியியல் துறை அதிகாரி கமலக்கண்ணன், கடலூர் மாவட்ட பொது சேவை மைய ஒருங்கிணைப்பாளர் சரவணன், வட்டார புள்ளியியல் ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், பொருளாதார கணக்கெடுப்பு குறித்த விளக்கங்களும், செயல்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது. பயிற்சியில் முதல் முறையாக டிஜிட்டல் முறையில் ஆண்ட்ராய்ட் மொபைல் செயலி மூலம் அனைத்து தரப்பு மக்களையும் இந்த கணக்கெடுப்பில் சேர்த்து வீடுகள், உற்பத்தி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என அனைத்து பகுதிகளிலும் கணக்கெடுப்பு நடத்துவது, இதன் மூலம் நாட்டின் பொருளாதார நிலையை அறிந்து கொள்ளவும், திட்டமிடவும் இயலும். இத்தகைய பொருளாதார கணக்கெடுப்பு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்கள் தங்களது முழு ஒத்துழைப்பையும் அளிக்க கோரிக்கை வைப்பது உள்ளிட்டவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பண்ருட்டி, திட்டக்குடி, விருதாச்சலம் மற்றும் வேப்பூர் ஆகிய தாலுகாக்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: