ஊரக வளர்ச்சி துறையினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

கடலூர், செப். 19: கடலூர் புதிய ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் அளித்துவரும் நெருக்கடிகளை கண்டித்தும், முற்றாக கைவிட கோரியும் பெருந்திரள் முறையீடு இயக்கம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சண்முகசிகாமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், துணை தலைவர் சீதாபதி கோரிக்கை விளக்க உரையாற்றினார். பல்வேறு சங்க நிர்வாகிகள் அரிகிருஷ்ணன், செல்வம், தங்கதுரை வாழ்த்துரை வழங்கினர்.

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியன், பெருந்திரள் முறையீட்டை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் கொளஞ்சி, சீதாபதி, சந்தோஷ்குமார், ராமானுஜம் மற்றும் மாவட்டம் முழுவதும் இருந்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, கடலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைச்சர்கள் மற்றும் வருவாய் துறை ஆணையர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: