என்எல்சி மருத்துவமனையில் கல்லூரி தொடங்க வேண்டும்

நெய்வேலி, ஜூன் 23: நெய்வேலி என்எல்சி இதர பிற்படுத்தப்பட்டோர் தொழிற்சங்க தலைவர் புருஷோத்தமன் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் என்எல்சியில் பணிபுரியும் பொறியாளர்களின் குழந்தைகளுக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்எல்சி பொது மருத்துவமனையை நவீன வசதிகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். என்எல்சி மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும். என்எல்சி ஊழியர்களின் பணி ஓய்வுக்கு பிறகு குடியிருப்பில் தங்க இரண்டு ஆண்டு அவகாசம் அளிக்க வேண்டும். என்எல்சி நிறுவனத்தில் 15 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என கூறியிருந்தனர். அப்போது சங்க பொருளாளர் கணேசன், அலுவலக செயலாளர் பாலாஜி, துணை பொதுச்செயலாளர் தமிழரசன், துணை பொருளாளர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: