சிறுமியை கடத்தி திருமணம்: வாலிபர் கைது

கோபி, ஜூலை 18:   கோபி அருகே 17வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.  கோபி அருகே வடக்குமோதூரை சேர்ந்தவர் முருகேசன். கட்டிடத்தொழிலாளி. இவரது 17 வயது மகள் கடந்த சில நாட்களுக்கு முன் மாயமானார். இதுகுறித்து முருகேசன் பங்களாபுதூர் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சுரேஷ் (23) என்பவர் 17 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் சுரேசை போக்சோ சட்டத்தில் கைது செய்து, கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Advertising
Advertising

Related Stories: