மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி

சத்தியமங்கலம், ஜூலை 16: சத்தியமங்கலத்தில் மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி  அரசுப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற  மினி மாரத்தன் போட்டி நடந்தது.

தமிழகத்தில் போதிய மழையில்லாமல் நிலத்தடிநீர் மட்டம் குறைந்ததால் பல்வேறு பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வீடுகளில் மழைநீர் கட்டமைப்பை ஏற்படுத்தவும், மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தி சத்தியமங்கலம் அரசு பள்ளி மாணவர்கள்  பங்கேற்ற மினிமாரத்தான் போட்டி  நடந்தது.

சத்தியமங்கலம் எஸ்ஐ அம்மாசை போட்டியை துவக்கி வைத்தார். மழைநீர் விழிப்புணர்வு பதாகைகளுடன் துவங்கிய இப்போட்டி அத்தாணிசாலை, புதிய பாலம், பேருந்து நிலையம், கடைவீதி வழியாக மீண்டும் பள்ளியை சென்றடைந்தது.

இதில், பள்ளி தலைமை ஆசிரியர் தங்கமணி தலைமையில் ஆசிரியர்கள் மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்களை வழங்கினர். முடிவில், மாராத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

Related Stories: