முறையான நிதி ஒதுக்கீடு செய்ய கோரி திட்ட இயக்குனரிடம் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு மனு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் சுமிதா சுந்தர் தலைமையில், மாவட்ட செயலாளர் சதா பாஸ்கரன், மாவட்ட பொருளாளர் சிட்டி கிருஷ்ணமநாயுடு, மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.கோவர்தனன், மாவட்ட துணைத்தலைவர்கள் சத்யநாராயணன், ரமணி சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர்கள் அருள் முருகன், புவனேஸ்வரி ரவி, மாவட்ட இணை செயலாளர் சுகந்திராணி லிங்கம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை.ஜெயகுமாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மாநில நிதிக்குழு மானியம் முழுமையாக ஊராட்சிகளுக்கு பிரித்து வழங்க நடவடிக்கை வேண்டும். ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டிய மாநில நிதிக்குழு மாநிலத்தில் அதிக அளவு மின் கட்டணத்திற்கு ஊராட்சி அதிக தொகை ஒதுக்கப்படுகிறது. இதனால் ஊராட்சியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் பொதுமக்களுக்கு செய்து தர முடியவில்லை. இதனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிர்வாக சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் ஊராட்சியில் போதுமான நிதி இல்லாத காரணத்தினால் எந்த அடிப்படை வசதியும் செய்து தர முடியவில்லை. ஆகையால் இதனை ஆய்வு செய்து மின்கட்டணத்தை உண்டான தொகையினை ஊராட்சி பொது நிதிக்கு செலுத்துமாறு அறிவுறுத்த வேண்டும். கடந்த ஆண்டு காலமாக மாவட்டத்தில் சில ஊராட்சிகளுக்கு மின் கட்டணத்தை விட அதிகமான தொகை உள்ளது.அந்த தொகையை ஊராட்சி பொது நிதி கணக்கு கணக்கிற்கு மாற்றி தர வேண்டும். மாநில நிதிக்குழு மானியம் மாவட்டத்தில் சில ஊராட்சிகளுக்கு இதுநாள்வரையில் ஒதுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களுக்கு சேவையாற்ற ஊராட்சி மன்ற தலைவருக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது….

The post முறையான நிதி ஒதுக்கீடு செய்ய கோரி திட்ட இயக்குனரிடம் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு மனு appeared first on Dinakaran.

Related Stories: