நிலமோசடி செய்ததாக செவிலியர் உள்பட 2 பேர் மீது வழக்கு

ஆண்டிபட்டி, ஜூன் 25: ஆண்டிபட்டியில் ஜேஜே நகரைச் சேர்ந்த சேர்மலை மகன் கரிகாலன். நெசவுத்தொழில் செய்கிறார். அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ராதாகிருஷ்ணன் (40). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி நாகஜோதி, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக உள்ளார். இவர்கள் இருவரும், கரிகாலனிடம்  9 சென்ட் நிலத்தை தங்களுடைய நிலம் எனக் கூறி ரூ. 19 லட்சத்து 35 ஆயிரத்திற்கு பேசி முன்பணமாக  ரூ. 6 லட்சத்து 50 ஆயிரம் வாங்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் கரிகாலன் நிலத்திற்கான வில்லங்கம் பார்த்த போது நிலம் வேறு ஒரு நபருடையது என்பது தெரிய வந்து. இதனையடுத்து கொடுத்த பணத்தை வாங்கிய  கரிகாலனை ராதாகிருஷ்ணன் கொடுத்த பணத்தை திருப்பி வாங்குவதற்காக ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு சென்ற போது அவரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து கரிகாலன் கொடுத்த புகாரின்பேரில், ராதாகிருஷ்ணன், அவரது மனைவி நாகஜோதி மீது ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: