மாமல்லபுரத்தில் அவலம் இருளில் மூழ்கிய புராதன சின்னங்கள்

மாமல்லபுரம், ஜூன் 21: உலகப்புகழ் பெற்ற சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில்  அர்ஜூனன் தபசு, கலங்கரை விளக்கம், ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்பட  ஏராளமான பல்லவர் கால புராதன சின்னங்கள் உள்ளன. இவற்றைக் காண தமிழகம்  மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான உள்நாட்டு சுற்றுலாப்  பயணிகளும், அக்டோபர் முதல் மார்ச் வரை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும்  வந்து செல்கின்றனர். நாடு முழுவதிலும் உள்ள தாஜ்மகால், செங்கோட்டை,  ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டைகள் உள்ளிட்ட சுற்றுலாவுக்கு பெயர் போன  நகரங்களில் புராதன சின்னங்கள் இரவு நேரங்களில் மின் விளக்குகளால்  ஒளியூட்டப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் வித்தியாசமான ஒளி அமைப்புடன் அவற்றை  பார்ப்பதை, சுற்றுலாப் பயணிகள் பெரிதும் ரசித்து பார்ப்பார்கள்.

அதேபோல், மாமல்லபுரத்தில் மட்டும் புராதன சின்னங்களை இரவு நேரங்களில் பார்வையிட  வசதியாக, மின் விளக்குகள் அமைக்கப்பட்டு சோதனை முறையில் பரிசோதித்து  பார்க்கப்பட்டது. ஆனால், இத்திட்டம் செயல்படுத்தவில்லை.

இதனால், மாமல்லபுரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் இரவு  வெளிச்சத்தில் புராதன சின்னங்களை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன்  திரும்பி செல்கின்றனர். எனவே, புராதன சின்னங்களை பராமரிக்கும் மத்திய தொல்லியல் துறை, அவற்றை இரவு நேரங்களில் பார்க்கும் வகையில் மின் விளக்குகள் அமைத்து, ஒளியூட்டச் செய்ய வேண்டுமென சுற்றுலா பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: